Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு ஓய்வு: கேப்டன் ஆன ரோகித்!: வங்கதேச தொடர்!

Webdunia
வெள்ளி, 25 அக்டோபர் 2019 (13:22 IST)
வங்கதேசத்துடன் இந்திய அணி மோதும் டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – வங்கதேசம் போட்டியிடும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 3 முதல் தொடங்க இருக்கிறது. மூன்று டி20 ஆட்டங்கள், இரண்டு டெஸ்ட் தொடர்கள் கொண்ட இந்த விளையாட்டை கண்டுகளிக்க வங்கதேச பிரதமர் இந்தியா வர இருக்கிறார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென் ஆப்பிரிக்கா தொடர் என கோலி தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு பதிலாக இந்தியா ஏ அணியில் விளையாடி வரும் ஆல் ரவுண்டரான ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். கோலிக்கு பதிலாக இந்த தொடரின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி விளையாடுவது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தங்கள் விருப்ப ஆட்டக்காரர் கோலி இல்லாதது பலருக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments