Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதத்தை அவமதித்தாரா கோலி?

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:11 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி தேசிய கீதத்தை அவமதித்தாகவும், தேசிய கீதம் பாடும் போது வாயில் சூயிங் கம் மென்றதாகவும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை எழுந்துள்ளது.


 

 
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நேற்று முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கியது. போட்டி தொடங்கும் முன் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம். அப்போது வீரர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்துவார்கள்.
 
அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாயில் சூயிங் கம் மென்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கோலிக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 
தற்போது கோலியின் இந்த செயல் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு முன் இந்திய வீரர் ஒருவர் இதுபோன்று சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர், கேப்டனாக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? நீங்கள் இந்தியரா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சன்ரைசர்ஸை வெளுத்து வாங்கிய கொல்கத்தா! நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு..!

குவாலிஃபையர் 1: டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. ரன்மழை பொழியுமா?

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments