இந்தியா - இலங்கை இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது.
இன்று முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாக துவங்கியது.
மைதனத்தில் நின்ற தண்ணீர் வெளியேற்றய பின்னரே டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி களமறங்கிய இந்திய அணி முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ராகுல் முதல் பந்திலே வெளியேற அவரைத்தொடர்ந்து ஷிக்கர் தவான் 6 வது ஓவரில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.
இதையடுத்து புஜாரா மற்றும் கேப்டன் கோலி களத்தில் இருந்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக மொத்தமாகவே 11.5 ஓவர்களோடு போட்டி நிறுதப்பட்டது.
இதனால் மீதமுள்ள நாட்களில் வழக்கத்தை விட அரைமணி முன்னதாக துவங்கும் என அம்பயர்கள் அறிவித்துள்ளனர்.