Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல் பந்திலே விக்கெட் எடுத்து அசத்திய இலங்கை; தடுமாறும் இந்திய அணி

Advertiesment
முதல் பந்திலே விக்கெட் எடுத்து அசத்திய இலங்கை; தடுமாறும் இந்திய அணி
, வியாழன், 16 நவம்பர் 2017 (15:07 IST)
இந்தியா - இலங்கை இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


 

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது. இன்று முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறுகிறது.
 
மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தள்ளிப்போனது. மைதனத்தில் நின்ற தண்ணீர் வெளியேற்றய பின்னரே டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமறங்கிய இந்திய அணி முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுத்தது.
 
தொடக்க ஆட்டக்காரர் ராகுல் முதல் பந்திலே வெளியேற அவரைத்தொடர்ந்து ஷிக்கர் தவான் 6வது ஓவரில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து புஜாரா மற்றும் கேப்டன் கோலி களத்தில் உள்ளனர். தற்போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
நேற்றே ஆடுகளம் பற்றி கருத்து தெரிவித்தவர். ஈடன் கார்டனில் விக்கெட் மழை பொழியும் என்றனர். அதற்கேற்ப இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெய்னாவை கழட்டி விடும் சிஎஸ்கே? அதிகாரப்பூர்வ தகவல்!!