Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராத் கோஹ்லி, சுப்மன் கில் சதம்.. இலங்கைக்கு இமாலய இலக்கு!

Advertiesment
virat century
, ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:29 IST)
விராத் கோஹ்லி, சுப்மன் கில் சதம்.. இலங்கைக்கு இமாலய இலக்கு!
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 390 ரன்கள் எடுத்துள்ளது
 
விராட் கோலி தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 166 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேபோன்று சுப்மன் கில் 116 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 391 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி களமிறங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்தியா வென்று விட்டது என்ற கூறலாம் என்று வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி