இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்தன என்பதும் இரண்டிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்து உள்ளது. இதனை அடுத்து இந்திய பேட்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியிலும் இந்தியா வென்றுவிட்டால் இந்தியா இலங்கையை வாஷ்-அவுட் செய்து விடும் என்பதும் அதேபோல் இலங்கை வென்றால் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது