விராட் கோலியின் சகோதரர் பகிர்ந்த புகைப்படத்தால் உருவான குழப்பம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:38 IST)
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை நேற்று கோலி அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் பாலிவுட் அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஜனவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று அனுஷ்கா சர்மாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலம் என்றும் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விராட் கோஹ்லியின் சகோதரர் விகாஸ் கொஹ்லி ‘வீட்டுக்கு தேவதை வந்துள்ளார்’ எனக் கூறி ஒரு புகிப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த குழந்தைதான் விராட் கோலியின் குழந்தையின் புகைப்படம் என்று ரசிகர்கள் நினைத்து அதைப் பகிர ஆரம்பித்தனர். ஆனால் அதை மறுத்த விகாஸ் பெண் குழந்தை பிறந்துள்ளதை குறிப்பிடும் விதமாக இணையத்தில் இருந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்ததாகவும், அந்த புகைப்படத்தில் இருப்பது விராட் அனுஷ்கா தம்பதியின் குழந்தை இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!

இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

அடுத்த கட்டுரையில்
Show comments