Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரளி விஜய், தினேஷ் கார்த்திக் வெளியே; விளையாட தொடங்கிய கோஹ்லி, ரவிசாஸ்திரி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:58 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு பதில் தவான், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் இன்னும் இந்திய அணி தடுமாறி வருகிறது.
 
தொடக்க வீரரான முரளி விஜய் நீக்கப்பட்டு இரண்டாவது போட்டியில் விளையாடாத தவான் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் இந்த போட்டியில் மூலம் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறார்.
 
காயம் காரணமாக விலகி இருந்த பூம்ரா இந்த போட்டியில் விளையாடுகிறார். அணியில் வீரர்களின் மாற்றம் வெற்றி பெற பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் கோஹ்லியும், ரவிசாஸ்திரியும் தொடர்ந்து அதையே செய்து வருகிறார்.
 
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது கங்குலி, தோல்வி அடைந்ததால் அணியில் எந்த மாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இதை கோஹ்லியும், ரவிசாஸ்திரியும் சற்று செவி கொடுக்காமல் அவர்கள் செய்வதுதான் சரி என்று தொடர்ந்து வருகிறார்கள் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர். குறிப்பாக ஹர்பஜன் சிங், ரவிசாஸ்திரியை குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
இந்நிலையில் இந்திய அணி இந்த மூன்றாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments