Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி டக்-அவுட்: தவறான முடிவு என நடுவர்கள் மீது ரசிகர்கள் பாய்ச்சல்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:34 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது கிரிக்கெட் போட்டி இன்று மும்பை நகரில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டக் அவுட் ஆகி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த போட்டியில் எல்பிடபிள்யூ முறையில் விராட் கோலி அவுட் என நடுவர்கள் அறிவித்தது தவறான முடிவு என ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் நவீன தொழில்நுட்பங்களை தாண்டி முக்கியமான போட்டிகளில் இதுபோன்ற முடிவுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் என்றும் நடுவர்கள் திறன் மீதும் கேள்வி எழும்பும் என்றும் ரசிகர்கள் காரசாரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
சர்ச்சைக்குரிய வகையில் எல்பிடபிள்யூ கொடுத்து அவுட் செய்த நடுவர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் சுப்மன் கில், புஜாரே  மற்றும் விராட் கோலி ஆகிய மூவர் அவுட்டாகி உள்ளனர் என்பதும்,  மயங்க் அகர்வால் அரை சதம் அடித்து விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments