போட்டி தொடங்கியதும் முதல் விக்கெட்டை காலி செய்த உமேஷ் யாதவ்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (15:52 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ஷர்துல் தாகூர் ஐம்பத்தி ஏழு ரன்களும், விராத் கோலி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது அந்த அணி 5 ரன்களில் ஒரு விக்கெட்டும் ஆறு ரன்களில் ஒரு விக்கெட்டும் 52வது ரன்களில் ஒரு விக்கெட்டையும் என மூன்று விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய கேப்டன் ஜோ ரூட் 21 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 53 ரன்களுக்கு 3 விக்கெட்களோடு நேற்றைய ஆட்டம் முடிந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் நாள் போட்டி தொடங்கிய உடனேயே க்ரைக் ஓவர்டோன் விக்கெட்டை உமேஷ் யாதவ் எடுத்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments