Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் இரண்டு வீரர்களுக்கு கொரோனா: ஒலிம்பிக் ரத்தாகுமா?

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (08:45 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் வீராங்கனைகள் டோக்கியோ நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர் என்பதும் போட்டிக்கு தற்போது தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ளவர்களில் 10 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு மெக்சிகோ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இருந்த மெக்சிகோவின் பேஸ்பால் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த அணியின் உள்ள மற்ற வீரர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
பாசிட்டிவாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட சென்ற வீரர்களுக்கு ஜப்பான் சென்றதும் கொரோனா பாசிட்டிவ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து வீரர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது இதனால் ஒலிம்பிக் போட்டியை ரத்தாகுமா என்ற கவலையும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments