டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது.
ஒரு வருடம் கழித்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டு அரங்கம், வீரரர்கள் தேர்வு நடைபெற்று போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இப்படியான நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.
இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் விரங்கனைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரொனா தொற்று இரண்டாம் அலையாகப் பரவிய நிலையில் 3 வது அலை விரைவில் பரவவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
எனவே, ஜப்பான் நாட்டிலும்கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் எத்ன தகவல்கள் வெளியாகிறது.