இந்திய அணியின் இரு முன்னாள் ஹாக்கி வீரர்கள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1980 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. அப்போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திரபால் சிங் மற்றும் மகராஜ் கிஷன் கவுசிக் ஆகியோர் அடுத்தடுத்து ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களின் இறப்பு ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.