Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா 3 ஆம் உலகப் போர் உயிரி ஆயுதமா?

கொரோனா 3 ஆம் உலகப் போர் உயிரி ஆயுதமா?
, திங்கள், 10 மே 2021 (11:00 IST)
கொரோனா வைரஸை போர் ஆயுதமாக சீன ராணுவ விஞ்ஞானிகள் தயாரித்ததாக இதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15.89 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
குறிப்பாக இந்தியாவில் இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த வைரஸ் சீனா தான் உருவாக்கியது என கூறப்பட்டு இதன் மீதான விவாதங்கள் நடைப்பெற்று வந்த நிலையில் தற்போது இது குறித்து ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons என்ற பெயரில் வெளியாகியுள்ள கட்டுரையில், சீன ராணுவ விஞ்ஞானிகள் இந்த வைரஸை ஆயுதமாக்கி மனித உயிர்களிடையே பரவவிடுவது பற்றி விவாதித்தாக கூறப்பட்டுள்ளது. 3 ஆம் உலகப் போரை உயிரி ஆயுதம் மூலம் நடத்த திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
 
மேலும், இது தொடர்பான ரகசிய ஆவணங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் போர் ஆயுதம் எனவும், தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் இதனை ஏவி விட திட்டமிடப்பட்டது எனவும் அந்த கட்டுரை விவரிக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 நாளுக்கும் மொத்தமாய் வாங்கிட்டாங்க போலவே..! – 2 நாள் டாஸ்மாக் வசூல் இவ்வளவா?