Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு vs ஐதராபாத்.. சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியின் முடிவு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (07:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 65 ஆவது போட்டியாக பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த போட்டியின் முடிவை பெங்களூர் அணி ஆவலுடன் பார்க்கிறதோ இல்லையோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
 
இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணியை பொருத்தவரை இது ஒரு முக்கியத்துவம் இல்லாத போட்டி தான். ஆனால்  பெங்களூர் அணிக்கு இந்த போட்டியின் முடிவு மிகவும் முக்கியமானதாகும். 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது போல் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி செய்யப்படும் என்பதால் பெங்களூர் ரசிகர்களை விட சென்னை ரசிகர்கள் தான் இன்றைய போட்டியின் முடிவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி ஜெயித்து விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments