Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்டம் ஆரம்பித்ததுமே விழுந்தது விக்கெட்: வெற்றிபெறுமா இலங்கை?

Advertiesment
ஆட்டம் ஆரம்பித்ததுமே விழுந்தது விக்கெட்: வெற்றிபெறுமா இலங்கை?
, வெள்ளி, 28 ஜூன் 2019 (15:20 IST)
இன்று நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இலங்கையை தென் ஆப்பிரிக்க அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ரசிகர்கள் முன்னதாகவே கணித்து கொண்டே டி.வியின் முன் உட்கார இருக்கிறார்கள்.

இதுவரை நடந்த 6 போட்டிகளில் ஆடிய இலங்கை அணி 2 வெற்றி, 2 தோல்வி, அடைந்துள்ளது. மேலும் இரண்டு ஆட்டங்கள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்நிலையில் மீதி உள்ள மூன்று ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு இலங்கை செல்ல முடியும்.

அதேசமயம் இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில் இதுவரை ஒரே ஒரு தடவை மட்டும் வெற்றி பெற்று மீத 6 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. மீத ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா செல்ல முடியாது. இருந்தாலும் புள்ளி விவர பட்டியலில் கடைசியாக இருப்பதை தென் ஆப்பிரிக்க வீரர்கள் விரும்பமாட்டார்கள். முடிந்தளவு ஒரு சில வெற்றிகளையாவது தனதாக்கி கொள்ள விரும்புவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்று பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது இலங்கை. முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் அவுட் ஆகியிருக்கிறார் இலங்கை கேப்டன் கருணரத்னே. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் சமாளித்து இலங்கை வெற்றிபெற்று விடும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“தோனி ஒரு லெஜண்ட்”- சச்சினுக்கு பதிலடி கொடுத்த விராட் கோஹ்லி