நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் விளையாடிய நான்கு டி-20 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்றது. குறிப்பாக மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் சூப்பர் ஓவர்களில் த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே வேளையில் இந்த ஒரு போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என நியூசிலாந்து அணி கடுமையாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று விட்டதால் கடந்த போட்டி போலவே இந்த போட்டியில் இந்திய அணியில் புதிய வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரிஷப் பண்ட் கீப்பராக களமிறங்க வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. இந்த போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க ரிஷப் பண்ட் முயற்சிபாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்