Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஓவரில்....ராகுல் விருப்பத்தை நிறைவேற்றிய கோஹ்லி !

Advertiesment
சூப்பர் ஓவரில்....ராகுல் விருப்பத்தை நிறைவேற்றிய கோஹ்லி !
, வெள்ளி, 31 ஜனவரி 2020 (17:36 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று வெலிங்டனில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் போடப்படும் நிலை ஏற்பட்டது.இதில் முந்தைய  ஆட்டத்தைப் போலவே இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோலி  ஒரு புதிய தகவல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. பும்ரா வீசிய சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் மட்டுமே அடித்ததால் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
கேஎல் ராகுல் மற்றும் விராத் கோலி களமிறங்கிய நிலையில் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்த கேஎல் ராகுல் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து விராட்கோலி 4-வது பந்தில் 2 ரன்களும், ஐந்தாவது பந்தில் 4 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி இன்னொரு சூப்பர் ஓவர் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வெற்றியை அடுத்து இந்தியா 4 -0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து கோஹ்லி கூறியதாவது :
 
சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சானுடன் கே.எஸல்.ராகுல் களமிறங்குவதற்காக தான் முடிவு செய்து இருந்தோம். ஆனால் அனுபவம் அதிகம் உள்ளவன் என்பதால் நன் களமிறங்க வேண்டும் என கே.எல்.ராகுல்  விரும்பியதால் நான் களமிறங்கினேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஓவரில் மீண்டும் ஒரு சூப்பர் வெற்றி: இந்தியா அசத்தல்