Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் என்பதால் வாய்ப்பு மறுப்பு! – உலக சாம்பியன்ஷிப் போட்டி வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை!

Advertiesment
பெண் என்பதால் வாய்ப்பு மறுப்பு! – உலக சாம்பியன்ஷிப் போட்டி வாய்ப்பை இழந்த தமிழக வீராங்கனை!
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (09:41 IST)
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக விளையாட்டு வீராங்கனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த காது கேளாத மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன். மாற்றுதிறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இவர் தேசிய தடகள போட்டிகளில் மூன்று முறை தங்க பதக்கம் வென்றவர்.

இந்நிலையில் பர்வீன் உலக காதுகேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். ஆனால் 5 ஆண் வீரர்களுடன் ஒரு பெண் வீராங்கனையை அனுப்ப முடியாது என இந்திய விளையாட்டு ஆணையம் அனுமதி மறுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலர் சமீஹாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பாரீஸ் சிட்டி ஆயத்தம்!