Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை தவறு செய்ய வைத்தார்கள்… டிம் பெய்ன் ஒப்புதல்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:21 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் இந்திய வீரர்களை சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 200 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதையடுத்து இந்திய அணி வெற்றிக்கு தேவையான 70 ரன்களை 2 விக்கெட்களை மட்டுமே இழந்து எடுத்தது. இதன்மூலம் அடிலெய்ட் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துள்ளது.

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய டிம் பெய்ன் ‘ எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு எங்களை தவறு செய்ய வைத்தார்கள் இந்திய பவுலர்கள். நாங்கள் தகவமைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அதில் இருந்து மீண்டு வருவோம்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments