Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் காலவரையறையற்ற விலகல்… டிம் பெய்ன் அறிவிப்பு!

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் காலவரையறையற்ற விலகல்… டிம் பெய்ன் அறிவிப்பு!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:56 IST)
ஆஸி அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் காலவரையறையின்றி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் இருந்தது. இந்நிலையில் தற்போது தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான்கு வருடங்கள் முன்னதாக சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஆனால் அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம். ஆனால் தற்போது அந்த குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட உள்ளதாக அறிந்தேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து ஒரு வீரராக அணித்தேர்வில் இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.  இந்நிலையில் இப்போது அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக காலவரையறையின்றி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுகப் போட்டியில் சதம்… சாதித்த ஸ்ரேயாஸ் ஐயர்!