டிம் பெய்ன் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் டிம் பெய்ன். இவர் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதே சக பெண் ஊழியருக்கு பாலியல் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக இவர்மீது புகார் இருந்தது. இந்நிலையில் தற்போது தனது கேப்டன் பொறுப்பை பெய்ன் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து டிசம்பர் மாதம் தொடங்க உள்ள ஆஷஸ் தொடருக்கான கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்த அணியின் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.