Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த மூன்று கேலரிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (21:54 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்டிருந்த மூன்று கேலரிகள் திறப்பு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 3 கேலரிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் இன்று கேலரிகள் திறக்கப்பட்டுள்ளது. 3 கேலரிகள் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது 3 கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புதுப்பித்தது. ஆனால் கேலரிகளை புதுப்பிக்க தங்களிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என சென்னை பெருநகரவளர்ச்சிக் குழுமம் குற்றம் சாட்டியதால் சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. 
 
இந்த பிரச்சனைக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக தீர்வு காணப்படாததால் சேப்பாக்கத்தில் உள்ள 3 கேலரிகளையும் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் சமயங்களில் ரசிகர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது இருதரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து எட்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த மூன்று கேலரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த போட்டியில் அந்த மூன்று கேலரிகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments