Publish Date: Fri, 13 Mar 2020 (11:27 IST)
Updated Date: Fri, 13 Mar 2020 (11:40 IST)
தங்கத்தின் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ.1,096 குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.33,848க்கு விற்பனை ஆனாது. அதன் பின்னர் விலை ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நிலைமை மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குசந்தை இறங்குமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய பங்குசந்தை ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 3090 புள்ளிகள் குறைந்து 29,687 ஆக தொடங்கியது, நிப்டி 966 புள்ளிகள் குறைந்து 8,624 ஆனது. இதனால் உடனடியாக 45 நிமிடங்கள் பங்கு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையின் வர்த்தகமும் சரிந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைந்து ரூ.32,160க்கு விற்பனை ஆகிறது.