Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற சிஎஸ்கே: புதிய சாதனை!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (06:31 IST)
விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற சிஎஸ்கே: புதிய சாதனை!
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றது
 
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 178 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஆகிய இருவருமே போட்டியை முடித்துவிட்டனர் 
 
17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னர் விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 184 என்ற இலக்கை எட்டியதே விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற அதிக ஸ்கோர் ஆகும். இதனை அடுத்து தற்போது தான் சென்னை அணி 179 என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அடுத்து சென்னை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவு… இறுதிப் போட்டியில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

சாம்பியன்ஸ் கோப்பைதான் கடைசி… ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிப்பா?

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா & நியுசிலாந்து… இரு அணிகளும் பயணம் செய்த தூரம் எவ்வளவு தெரியுமா?

தூங்கியெழுந்து வருவதற்குள் Timed out கொடுத்தால் எப்படி?... பாகிஸ்தான் வீரரைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

வருண் சக்ரவர்த்திக்குப் பதில் வருண் தவானுக்கு வாழ்த்து… எக்ஸ் தளத்தில் நடந்த குழப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments