Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரணதுங்காவுக்கு முதல் போட்டியிலேயே பதிலடி கொடுத்த இந்தியா!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (12:04 IST)
இந்தியாவின் இரண்டாம் தர அணி இந்தியாவுக்கு வந்துள்ளது எனக் கூறிய இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவுக்கு பதிலளித்துள்ளது இந்திய அணி.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் உலகக்கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா ‘இரண்டாம் தர அணியை அனுப்பி, நம்மை அவமானப்படுத்தியுள்ளனர். தொலைக்காட்சி வருவாய்க்காக இதை ஒத்துக்கொண்ட நம் கிரிக்கெட் நிர்வாகத்தையே இதற்காக நாம் கண்டிக்க வேண்டும்.’ எனக் கூறி விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியை மிகவும் எளிதாக வென்று இலங்கை அணியை பந்தாடியது இந்திய அணி. இந்நிலையில் இப்போது இந்திய ரசிகர்கள் ரணதுங்காவை குறிப்பிட்டு இதுவா இரண்டாம் தர அணி என்று கேள்வி எழுப்பியும் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments