Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு' .. ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (20:26 IST)
தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். இந்நிலையில் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை அணி வீரர்கள் அமீரகம் செல்ல இருக்கின்றன.
 

இதற்காக சி எஸ் கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வர உள்ளனர். இங்கு 5 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் அவர்கள் அதன் பின்னே விமானம் ஏற உள்ளன. இந்நிலையில்

தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்களுக்கு இன்று சென்னையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தோனிக்கு கொரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் , சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் தோனி சென்னை வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆனால் இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். மேலும், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்