Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொல்கத்தா அணி தோல்வி அடைந்தாலும் சுனில் நரேன் செய்த உலக சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

Advertiesment
சுனில் நரேன்

Siva

, திங்கள், 26 மே 2025 (07:27 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் ஹெட் மற்றும் கிளாசன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்த நிலையில் கொல்கத்தா அணி நேற்று 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான சுனில் நரேன் ஒரு உலக சாதனையை செய்துள்ளார்.
 
அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக 210 விக்கெட்டுகள் வீழ்த்தி இதற்கு முந்தைய சாதனையை செய்த சமித் பட்டேல் என்பவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். சமித் பட்டேல் 208 விக்கெட்டுகள் எடுத்து இருந்த நிலையில் சுனில்  நேற்று 2 விக்கெட்டுகள் எடுத்தது மூலம் 210 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
 
இந்த பட்டியலில் மும்பை அணிக்காக விளையாடிய மலிங்கா 195 விக்கெட்டுகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்காக சுனில் நரேன் கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 முறை 275க்கு மேல் இலக்கு கொடுத்த ஐதராபாத் அணி.. 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!