மெஸ்சியின் சாதனையை சமன் செய்த இந்திய கேப்டன்!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (11:33 IST)
கால்பந்து கோப்பை போட்டி தொடர் கண்டங்களுக்கிடையே நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் பங்கேற்றன. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 
 
தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்றது. 
 
கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார். ஆகமொத்தம், சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். 
 
இதன் மூலம் உலக கால்பந்து ஹீரோவான மெஸ்சியின் கோல் சாதனையை, இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி சமன் செய்துள்ளார். போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..

டி 20 ஃபார்மட்டுக்கு ‘குட்பை’ சொன்ன கேன் மாமா!

உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி.. மழை குறுக்கிட்டால் யார் சாம்பியன்?

அடுத்த கட்டுரையில்
Show comments