Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-நியூசிலாந்து: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சூரியனால் போட்டி நிறுத்தம்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (12:26 IST)
இதுவரை கிரிக்கெட் போட்டி போதுமான வெளிச்சம் இன்றி உள்பட ஒருசில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆனால் முதல்முறையாக பேட்ஸ்மேன் முகத்திற்கு நேராக சூரிய வெளிச்சம் பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 

இன்று நடைபெற்று வரும் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து 158 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. 10 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக சூரிய ஒளி பட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டி இன்னும் ஒருசில நிமிடங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வரலாற்றில் சூரிய ஒளியால் நிறுத்தப்பட்ட முதல் போட்டி இதுதான் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments