Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடை விடுமுறையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Advertiesment
கோடை விடுமுறையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

J.Durai

கோயம்புத்தூர் , திங்கள், 22 ஏப்ரல் 2024 (14:58 IST)
கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.விடுமுறையை கழிப்பதற்காக பொதுமக்கள் குடும்பத்துடன் கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
 
கோவை சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலத்தில்  கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
 
கோவை குற்றாலம்  நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்தும் இருந்தால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
 
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டது.நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். இன்று ஒரே நாளில் கோவை 
குற்றலாத்திற்கு 1000-க்கும் மேற்பட்டோர் வருகை என வனத்துறை தகவல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஒரு மாறுபட்ட சினிமா ஃபைண்டர்!