Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்மித் சதம்… கடைசி நேரத்தில் கலக்கிய ஜடேஜா!

ஸ்மித் சதம்… கடைசி நேரத்தில் கலக்கிய ஜடேஜா!
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.நேற்று காலை சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் ஆஸி அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முதல் நாள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளனர். தற்போது களத்தில் லபுஷான் 67 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களும் சேர்த்து உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். அதையடுத்து இன்று காலை பேட்டிங்கை தொடங்கிய நிலையில் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் நிலையான நின்று சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்தார். கடந்த இரண்டு போட்டிகளாக மோசமான பேட்டிங்கை அவர் வெளிப்படுத்திய நிலையில் இந்த சதத்தின் மூலம் தன்னை நிரூபித்தார்.

ஒரு முனையில் ஸ்மித் நிலைத்து நின்றாலும் மறுமுனையில் விக்கெட்களை சாய்த்தார் ஜடேஜா. இன்று அவர் நான்கு விக்கெட்களைக் கைப்பற்றினார். சற்று முன்புவரை ஆஸி 323 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. ஸ்டிவ் ஸ்மித் 116 ரன்களோடு களத்தில் உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல கால்பந்து வீரர் மாரடைப்பால் மரணம் !