மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் இலங்கை அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது .இதில் கேப்டன் சமரி அட்டப்பட்டு 119 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முதன்முதலாக சதம் அடித்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மலேசிய அணி 40 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
மேலும் இன்று நடந்த தாய்லாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தாய்லாந்து அணி வெற்றி பெற்றது. தாய்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 96 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச அணி 17.3 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நாளை பாகிஸ்தான் மற்றும் யூஏஈ அணிகளும், இந்தியா - நேபாளம் அணிகளும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.