Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 2024: ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி.. போராடி மீண்டும் தோல்வி அடைந்த மும்பை..

ஐபிஎல் 2024: ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி.. போராடி மீண்டும் தோல்வி அடைந்த மும்பை..

Siva

, வியாழன், 28 மார்ச் 2024 (07:00 IST)
ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது

ஹென்றி கிளாசன் மிக அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார் என்பதும் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர்களும் சூப்பராக விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 278 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியும் அதிரடியாக விளையாடினாலும், 20 ஓவர்களில் அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனை அடுத்து ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது

ஏற்கனவே மும்பை அணி குஜராத்  அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அந்த அணிக்கு இரண்டாவது தோல்வி கிடைத்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்… பெங்களூர் அணியின் 11 ஆண்டுகால சாதனையை முறியத்த ஐதராபாத்!