Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 ரன்கள் மட்டுமே முன்னிலை: தென்னாப்பிரிக்கா திணறல்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (08:16 IST)
29 ரன்கள் மட்டுமே முன்னிலை: தென்னாப்பிரிக்கா திணறல்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் கடந்த 26ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் 29 ரன்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடி 378 ரன்கள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 158 ரன்கள் பின்தங்கி இருந்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் அந்த அணி 29 ரன்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மூன்று நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்க அணியின் ஆட்டம் இதே ரீதியில் இருந்தால் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு மிகவும் குறைவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் இந்த போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments