Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்கா தொடர் தோல்வி.. ஓய்வு முடிவை மாற்றிய டி வில்லியர்ஸ் – ஆனால் …?

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (13:06 IST)
தென் ஆப்பிரிக்க அணி உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே ஹாட்ரிக் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இல்லாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணியை அரை இறுதி வரை சிறப்பாக வழிநடத்தினார் டிவில்லியர்ஸ்.

ஆனால் கடந்த ஆண்டு அதிர்ச்சியளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது உலகக் கிரிக்கெட் ரசிகர்களிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் ஐபிஎல் உள்ளிட்ட பல டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் அவர் மேல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விரும்புவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments