Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரிக்கெட்டுக்குப் பின் என்ன செய்யப்போகிறேன் – தோனியின் அடுத்த அவதாரம் !

Advertiesment
கிரிக்கெட்டுக்குப் பின் என்ன செய்யப்போகிறேன் – தோனியின் அடுத்த அவதாரம் !
, செவ்வாய், 21 மே 2019 (11:48 IST)
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓவியம் வரைவதில் நேரம் செலவிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இப்போது உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக ஆயத்தம் ஆகி வருகிறார். இதுதான் அவர் கலந்துகொள்ளும் கடைசி உலககோப்பை தொடராக இருக்கும் .தொடருக்குப் பின்னர் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னர் தான் என்னவாக ஆகப்போகிறேன் என்படஹி வீடியோ ஒன்றின் மூலம் சொல்லியுள்ளார். அதில் ‘சிறு வயதில் நான் ஓவியராக வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போது நிறைய கிரிக்கெட் விளையாடிவிட்டேன். இனி ஓவியங்கள் வரைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ’ எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் அவர் வரைந்த சில ஒவியங்களையும் அவர் காட்டினார். இதனால் தோனி விரைவில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவார் என சலசலப்புகள் எழ ஆரம்பித்துள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டியின் இடையே திடீரென மரணம் அடைந்த நடுவர்!