Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்க வேண்டும்: அமெரிக்க வீரர்கள் கோரிக்கை..!

Siva
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:25 IST)
ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடை பிரிவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வீரர்கள் ஒலிம்பிக் சங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் கலந்து கொண்ட நிலையில் அவர் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை மேல்முறையீடு விசாரணை நடைபெறும் என்றும், இந்த  விசாரணையின் போது வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் வழங்க இந்தியாவின் சார்பில் கோரிக்கை விட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்று ஒலிம்பிக் கமிட்டி இடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து தினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments