Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வினேஷ் போகத் பயிற்சியாளர்கள் விடுமுறைக்கு சென்றார்களா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

Advertiesment
punjab cm

Mahendran

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (17:42 IST)
உடல் எடை அதிகமானதை அவரது பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் பயிற்சி கொடுக்க சென்றார்களா? அல்லது விடுமுறைக்கு சென்றார்களா? என பஞ்சாப் முதல்வர் பகவத் மான் சிங் ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவத்மான் ஆறுதல் கூறினார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது என்றும் பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க வேண்டாமா? அவர்கள் என்ன விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர், பஞ்சாப் முதல்வர் உள்பட பலரும் வினேஷ் போகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு தகுதி நீக்கத்தை ரத்து செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களின் மொபைல் எண்கள் தனியார் கல்லூரிகளுக்கு விற்பனை.. பெரும் முறைகேடு..!