இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு நடந்து சமனில் முடிந்துள்ளது. இதன் மூலம் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் உள்ளது.
இதையடுத்து இறுதி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்தியா வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் சமனிலாவது முடிக்க முடியும். இந்நிலையில் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அர்ஷ்தீப் தற்போது குணமாகியுள்ளதாகவும் அதனால் அவர் நாளை நடக்கும் போட்டியில் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்காக நாளை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார்.