Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா பாலும் போல்ட் ஆகிட்டு இருந்தாருங்க… பேட் கம்மின்ஸ் இன்னிங்ஸ் பற்றி பேசிய KKR வீரர்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:10 IST)
பேட் கம்மின்ஸ் நேற்று விஸ்வரூபம் எடுத்து ஆடிய அதிரடி இன்னிங்ஸ் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து 161 ரன்கள் சேர்த்தது மும்பை அணி.

162 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா 9 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி வந்தது. சில விக்கெட்டுகளை இழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் நின்று நிதானமாக விளையாடி ஒரு அரைசதத்தை வீழ்த்தினார். 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய பேட் கம்மிம்ஸ் மைதானத்தில் ஒரு ருத்ர தாண்டவத்தை ஆடினார். சரமாரியாக 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை அடித்து நொறுக்கி 14 பந்துகளில் அரைசதத்தை வீழ்த்தினார்.

போட்டி முடிந்த பின்னர் பேட் கம்மின்ஸ் பேட்டிங் பற்றி பேசிய கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ‘நேற்று பயிற்சியில் எல்லா பந்துகளும் பவுல்ட் ஆகிட்டு இருந்தார். அவருக்கு பக்கத்துலதான் நான் பேட் செஞ்சுட்டு இருந்தேன். இன்னைக்கு இந்த இன்னிங்ஸ என்னால நம்பவே முடியல’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments