Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

Siva
திங்கள், 2 ஜூன் 2025 (08:45 IST)
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டனாக இது ஐம்பதாவது வெற்றியாகும் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், கேப்டன் ஆக எம்.எஸ். தோனி பெற்ற வெற்றியை யாரும் அசைக்க முடியாது என்பது புள்ளி விவரங்களின் படி தெரிய வருகிறது.
 
ஐபிஎல் தொடரை பொருத்தவரை, கேப்டனாக எம். எஸ். தோனி 136 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில், மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 87 வெற்றிகளை தனது தலைமையில் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில், கௌதம் கம்பீர் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் கேப்டனாக இருந்து 71 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். நான்காவது இடத்தில், பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 66 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
 
தற்போது ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் அணிக்காக ஐம்பதாவது வெற்றியை பெற்றுள்ள நிலையில், அவர் எம். எஸ். தோனியை பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அதே நேரத்தில், விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரையும் இன்னும் ஒருசில ஆண்டுகளில் முந்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments