தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

vinoth
திங்கள், 2 ஜூன் 2025 (08:44 IST)
பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.  போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதையடுத்து ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியாக விளையாடினாலும் அவ்வப்போது விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தது. ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 19 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த போட்டியின் இரண்டாம் பகுதியில் ஆட்டம் பெரும்பான்மையான நேரம் மும்பை இந்தியன்ஸ் கையில்தான் இருந்தது. ஆனால் அதை ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடியான ஆட்டத்தால் தட்டுப்பறித்தார். இதனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நொறுங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார். அவரை சகவீரர்கள் வந்து தேற்றி ஆறுதல் படுத்தினர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களுக்குள் விளையாட வேண்டும்… முன்னாள் பயிற்சியாளர் விருப்பம்!

நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கபில்தேவ் முக்கிய அறிவுரை..!

பிசிசிஐ தலைவரா? நானா? சச்சின் தரப்பு அளித்த விளக்கம்!

பெருந்தன்மையாக UAE வீரரின் விக்கெட்டை வேண்டாம் என்ற சூர்யகுமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டி 20 தொடரில் இந்திய அணி படைத்த புதிய சாதனை… பெட்டிப்பாம்பாய் அடங்கிய UAE!

அடுத்த கட்டுரையில்
Show comments