Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? அதிர்ச்சியில் ஷமி

Advertiesment
என் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவரா? அதிர்ச்சியில் ஷமி
, வியாழன், 15 மார்ச் 2018 (20:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி மீது அவருடைய மனைவி திடுக்கிடும் புகார்களை சமீபத்தில் அடுக்கி கொண்டே போனார் என்பதும் இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஷமியை எனக்கு நன்றாக தெரியும், அவர் நாட்டுக்கும் வீட்டுக்கும் துரோகம் செய்ய மாட்டார் என்றும் தல தோனி சர்டிபிகேட் கொடுத்திருந்தார்

இந்த நிலையில் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்றும், பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு அந்த உண்மையை மறைத்து ஷமியை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஹசின் முன்னாள் கணவர், ஷமியும் ஹசினும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறினார். இந்த பேட்டியை பார்த்த பின்னர்தான் ஷமிக்கு தனது மனைவி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஷமி கூறியதாவது: ஹசின் ஜஹன் ஏற்கனவே திருமணம் நடந்தது, குழந்தைகள் இருப்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை. ஹசின் ஜஹனுக்கு முதல் திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளை அவரின் உறவினர்கள் என்றே எனக்கு அடையாளம் காட்டினார். எனக்கும், ஹசின் ஜஹனுக்கும் நடந்தது இரண்டாவது திருமணம் என்பதே எனக்கு தெரியாது. எங்களுக்கு திருமணம் நடைபெற்ற பின்னர் இரண்டு குழந்தைகள் பற்றி அவர் கூறியபோது தன்னுடைய தங்கையின் குழந்தைகள் என்றார். நான் ஏமாந்துவிட்டேன் என்று ஷமி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை சதம் அடித்தார் வாசிம் ஜாபர்!