சமீபத்தில் முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், தனது கணவர் கொடூரமானவர். அவர் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும், ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்கள். ஷமி பல பெண்களுடன் பேசி வருவதை தெரிந்தபோது சகித்துக்கொள்ள முடியாமல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்றார்.
இந்நிலையில் ஷமியின் மனைவி ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த பிரச்சனை காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. தற்போது இவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதால் ஐ.பி.எல். போட்டியில் அவர் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஷமி டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். எனவே, இது குறித்து டெல்லி டேர்டேவில்ஸ் அணி ஆசோசனை நடத்தி வருகிறது. இந்திய அணியிலேயே இடம் இல்லாத போது, ஐபிஎல் அணியிலும் இடம் இருக்காது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.