Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணி தோல்விக்கு பொறுப்பேற்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (07:15 IST)
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 152 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கொல்கத்தா அணி மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான ராணா மற்றும் கில் ஆகிய இருவரும் மிக அபாரமாக விளையாடியதால் அந்த அணி இலக்கை நெருங்கியது. ஆனால் ராணா மற்றும் கில் ஆகிய இருவரும் அவுட்டான பிறகு அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
 
குறிப்பாக இறுதிகட்டத்தில் 4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை அந்த அணி இழந்ததால் 142 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 153 என்ற இலக்கை மிக எளிதாக கொல்கத்தா எட்டிவிடும் என நினைத்திருந்த கொல்கத்தா ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து தனது டுவிட்டரில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் கூறிய போது ’மிகவும் ஏமாற்றம் அளிக்க கூடிய செயல்பாடு. கொல்கத்தா அணி ரசிகர்களிடம் தோல்விக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா சின்னசாமி மைதானம்?... RCB ரசிகர்கள் சோகம்!

சஞ்சுவைத் தர்றோம்… ஆனா அந்த மூனு பேரில் ஒருத்தர் வேணும்… RR வைத்த டிமாண்ட்!

தொழிலதிபரின் பேத்தியோடு சச்சின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments