Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம் –அப்ரிடி பாராட்டு !

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (13:47 IST)
நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஐபிஎல் தான் காரணம் என பாகிஸ்தாப் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்குப் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இந்த வெற்றி குறித்து டிவிட்டரில் ‘கிரிக்கெட் விளையாடும் திறன் அதிகமாகியுள்ளது. தகுதியான வெற்றியைப் பெற்றுள்ள பிசிசிஐக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்கான புகழனைத்தும் ஐபிஎல்-க்கே சேரும். இளம் வீரர்களைக் கண்டறிவதோடு நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடவும் ஐபிஎல் கற்றுக்கொடுத்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

அடுத்த கட்டுரையில்
Show comments