Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேன் வார்னுக்கே ஸ்பின் பற்றி பாடம் எடுக்கும் நெட்டிசன்கள்… சேவாக் தன் ஸ்டைலில் பதில்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (13:26 IST)
சமீபத்தில் நடந்து வரும் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்யவில்லை.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழை காரணமாக இதுவரை இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் போட்டி நடந்த இரண்டு நாட்கள் கூட மழையால் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த போட்டி நடக்கும் பிட்ச் அமைப்புக் காரணமாக நியுசிலாந்து அணி சுழல்பந்து வீச்சாளர்களை அணியில் எடுக்கவில்லை. ஆனால் இந்தியா இரண்டு சுழலர்களை தேர்வு செய்தது.

இதுபற்றி பேசிய ஆஸி முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் ‘ஒரு ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு வேலை செய்யும் என்றால் கண்டிப்பாக சுழல்பந்தும் வொர்க் அவுட் ஆகும்’ எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த ஒரு நெட்டிசன் துடுக்காக ‘உங்களுக்கு ஸ்பின் எப்படி வேளை செய்யும் எனத் தெரியுமா?’ எனக் கேட்க பலரும் வார்னை கேலி செய்யும் விதமாக பதிவிட்டனர்.

இந்த பதிவைப் பகிர்ந்த சேவாக் ‘அதானே, இவரது கேள்வியை ஃப்ரேம் செயுது கொள்ளுங்கள் வார்ன். ஸ்பின்னை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராமில் விளம்பரப் பதிவுகளை நீக்கிய கோலி… என்ன காரணம்?

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments