கடந்த சில மாதங்களாக தென்னாபிரிக்காவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
மூன்று டி20 போட்டிகளில் இரண்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் ஒரு போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டதால் டி20 தொடரை தென்னாபிரிக்கா வென்றது.
ஆனால் அதே நேரத்தில் ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் முழுமையாக வென்றது என்பதும், மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்ற நிலையில் நேற்றுடன் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்கா வென்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. அதன் பின்னர் மீண்டும் பேட்டிங் செய்து 478 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 259 ரன்கள் எடுத்த ரியான் ரிக்கல்டன் என்பவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.