ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த சர்பராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
	
	
	மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை போட்டி டிராவில் முடிந்தது. முதலில் ஆடிய உத்தர பிரதேச அணி 625 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 128 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பிறகு லாத் (98), கேப்டன் ஆதித்ய தாரே (97), முலானி (65)  சேர்த்து சரிவில் இருந்து மீட்டனர்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	பின் வரிசையில் வந்த சர்பராஸ் கான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் அடித்து அசத்தினார். இதனால் மும்பை அணி 688 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்தது. முச்சதம் குறித்து பேசிய சர்பராஸ் கான் ‘ இரண்டு நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டாலும் என்னால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என நம்பினேன். எங்களை அவர்கள் நீண்ட நேரம் பீல்ட் செய்ய வைத்ததைப் போல நாங்களும் அவர்களை காயவைக்க வேண்டும் என நினைத்தேன்’ எனக் கூறியுள்ளார்.